கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சாத்தூர், ஆக. 10: சாத்தூர் அருகே, மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (எ) குரங்காட்டி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருடன் கடந்த 8ம் தேதி மது குடித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்த முத்துராமன், நேற்று வீட்டு வாசலில் நின்றிருந்த வீரமணியை அவதூறாக பேசி, அரிவாளால் தலையின் பின்பக்கம் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த வீரமணியின் தந்தை சாலமன்ராஜா மற்றும் தாய் கற்புக்கரசி ஆகியோரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சத்தம் போடவே, ‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என வீரமணிக்கு, முத்துராமன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த வீரமணி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின்பேரில், சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, முத்துராமன் (எ) குரங்காட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: