சிவகாசியில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகாசி, ஆக. 10: ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கலை கண்டித்து சிவகாசியில், மின்வாரிய ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மின்விநியோகத்தை தனியார் வசம் விடவேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயம் செய்தல் தொடர்பான மின்சார திருத்த மசோதாவை ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகாசி மின்கோட்ட ஊழியர்கள் அலுவலகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பணியை புறக்கணித்து, அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதில், சிவகாசி மின் கோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: