கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்

விருதுநகர், ஆக. 10: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்: நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011 முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 14-6-2018 முதல் 13-9-2018 வரை மற்றும் 22-3-2021 முதல் 4-4-2021 வரையிலான காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி இசைவு பெற்றுக் கொள்ளலாம். மேலும் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்க (www.tn.gov.in/tcp) 1-7-2022 முதல் கூடுதலாக 6 மாத காலத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களுக்கு துணை இயக்குநர், விருதுநகர் மாவட்ட அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவு, மதுரை ரோடு சத்திரரெட்டியபட்டி, விருதுநகர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: