கொடைக்கானலில் அட்டகாசம் செய்த குரங்குகள் ‘அரஸ்ட்’

கொடைக்கானல், ஆக. 10: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரில் புகும் காட்டுமாடு, காட்டுப்பன்றி கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தியும், விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது. இதை தொடர்ந்து தற்போது குரங்குகளும், வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பழைய அப்பர் லேக் சாலை பகுதி குடியிருப்பு பகுதியில் புகுந்த குரங்குகள் வீடுகளில் உள்ள பொருட்களையும் தூக்கி சென்று விடுவதும், வெளியில் நிறுத்தியுள்ள வாகனங்களை சேதப்படுத்தியும் வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைத்தனர். தொடர்ந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.  இதேபோல் குரங்குகள் அட்டகாசம் செய்யும் பகுதிகள் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: