மத்திய மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் பரந்தாமன் எம்எல்ஏ மனுக்களை பெற்றார்

திருப்பூர், ஆக. 10:  திருப்பூர் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு மாநகர திமுக உட்கட்சி தேர்தலுக்காக, மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன.  தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன் எம்எல்ஏவிடம் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள திமுகவினர் மனுக்களை பூர்த்தி செய்துகொடுத்தனர். இதற்கு தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமர், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன் உள்பட பலர் மனுக்களை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துசரவணன், ஈஸ்வரமூர்த்தி, செந்தூர் முத்து.பகுதி கழக செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, ராமதாஸ், ஜோதி, மு.க.உசேன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் பி.ஆர்.செந்தில்குமார், மாநகர அமைப்பாளர் முத்துகுமார், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிவபாலன், திலக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: