பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு

குன்னூர், ஆக.10: பர்லியாறு ஊராட்சியின் கடைகளுக்கான டெண்டர் நிர்வாக ரீதியான காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பர்லியார் பஞ்சாயத்து கட்டுபாட்டில் கரன்சி உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன.  கடைகள் அனைத்தும் டெண்டர் விடப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியான டால்பின் நோஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கான டெண்டர் இன்று (10ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பர்லியாறு ஊராட்சி நிர்வாக ரீதியாக இன்று நடைபெற இருந்த டெண்டரை ஒத்திவைத்துள்ளது. இது குறித்து ஊராட்சி தலைவர் கூறுகையில், ‘பர்லியாறு ஊராட்சிக்குட்பட்ட கடைகளுக்கான ஏலம் இன்று நடத்து இருந்தோம். ஆனால் சில நிர்வாக காரணங்களால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு ஏலம் நடைப்பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார்.

Related Stories: