காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.10:  கோவை காட்டூரில் இந்துமுன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்துகொண்டு பேசுகையில்,``கோவை பகுதிகளில் மதமாற்ற நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க சென்ற இந்து முன்னணியினர் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, வரும் 14-ம் தேதி காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ேபாத்தனூர் கடைவீதியில் நடத்தப்படவுள்ளது’’ என்றார். இதில், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் தாமு, நிர்வாககுழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: