சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

காடையாம்பட்டி, ஆக.10: காடையாம்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், 30 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. காடையாம்பட்டி பேரூராட்சி நாச்சனம்பட்டி ஆதி திராவிடர் காலனியில் இருந்து மேல் காலனிக்கு செல்லும் வகையில், நத்தம் பாதை இருந்து வந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தனர். இந்நிலையில், காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் குமார் முயற்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் தலைமையில் நில அளவீடு செய்து அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர். தொடர்ந்து நாச்சனம்பட்டி ஆதி திராவிடர் காலனியில் இருந்து மேல் காலனிக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: