திமுக நிர்வாகிகள் மலரஞ்சலி

குமாரபாளையம்,ஆக.10: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் செல்வம் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகநாதன், நகர நிர்வாகிகள் ரவி, ரங்கநாதன், சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குமாரபாளையம் நகராட்சி அலுவலம் முன்பு நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன் தலைமையில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பள்ளிபாளையம் நகர திமுக அவைத்தலைவர் குளோப்ஜான் தலைமையில் நடந்த அஞ்சலி ெசலுத்தும் நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், முன்னாள் நகர செயலாளர் ரவி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணை தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொக்கராயன்பேட்டையில் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயமணி முருகேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழரசு, காட்டுவலவு வீரமணி, மாவட்ட சிறுபான்மையோர் அணி துணை அமைப்பாளர் ஷெரிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: