எல்பிஜி டேங்கர் லாரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல்

நாமக்கல், ஆக.10: தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த சங்கத்தில் 3 ஆண்டுக்கு ஒரு முறை  புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். 2022 -2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், வரும் 28ம் தேதி நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தேர்தல் குழுத் தலைவரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான வாங்கிலியிடம், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 10 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

அப்போது தேர்தல் குழு உறுப்பினர்களான ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சின்னுசாமி, லாரி சங்க பொருளாளர் சீரங்கன், உதவித்தலைவர் மணி (எ) சுப்புரத்தினம், செயலாளர் அருள், இணை செயலாளர் மயில் ஆனந்த், ட்ரெய்லர் சங்க இணை செயலாளர்கள் பரமசிவம், விஜய் ஆகியோர் உடனிருந்தனர். எல்பிஜ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவர், உதவி தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் 75 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ்எல்எஸ் சுந்தர்ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், சங்க உறுப்பினர் சேகர் தலைமையில், மற்றொரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

Related Stories: