மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளிபாளையம், ஆக.10: பள்ளிபாளையத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் நவரத்தின விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன், புரவலர் வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பங்கேற்று, அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மருத்துவர் பாலகிருஷ்ணன், முதியோர்களுக்கு வேட்டி சேலைகளையும், பள்ளி குழந்தைகளுக்கு பாட நோட்டுகளையும் வழங்கினார். ஆவாரங்காடு கிளை தலைவர் லோகநாதன் நன்றி கூறினார்.

Related Stories: