மேம்பாலங்கள் அமைக்க இன்று பூமி பூஜை

ஓசூர், ஆக.10: ஓசூர், தளி சட்டமன்ற தொகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பூமி பூஜையில் அமைச்சர் காந்தி பங்கேற்க உள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் ஆர்வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி, சொக்கரசன பள்ளி பெலத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, ₹6.50 கோடி மதிப்பில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை, தளி சட்டமன்ற தொகுதியில்

அஞ்செட்டி அருகே பயல் காடு, நாற்றாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ₹5.10 கோடியில், இரண்டு உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க பூமி பூஜை நடைபெறுகிறது.

எனவே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, மாநகர, பேரூர் செயலாளர்கள் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: