கஞ்சா வியாபாரி கைது

ஓசூர், ஆக.10: ஓசூர் சிப்காட் காவல்நிலைய எஸ்ஐ மஞ்சுநாத் மற்றும் போலீசார், பேடரப்பள்ளி, மூகண்டப்பள்ளி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேடர்பள்ளி பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சக்கிபுல் இஸ்லாம்(23) என்பதும், பையில், ₹23 ஆயிரம் மதிப்பிலான 1500 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. உடனே, சக்கிபுல் இஸ்லாமை போலீசார் கைது செய்தனர். அவரிடமிரந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Related Stories: