×

பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பொன்னமராவதி,ஆக.10: பொன்னமராவதி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு நடந்தது. கோயில் முன்பு உள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதே போல பொன்.புதுப்பட்டி நகர சிவன்கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ponnamaravati ,
× RELATED பொன்னமராவதியில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் கடையில் தீ