தாந்தோணிமலை பகுதிக்கு விரைவில் குடிநீர் வழங்க கோரிக்கை

கரூர், ஆக. 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதிக்கு விரைவில் குடிநீர் சப்ளை வழங்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, சணப்பிரட்டி போன்ற பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, மேல்நிலை தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழுது ஏற்பட்டுள்ள பகுதியை சம்பந்தபட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அதனை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாந்தோணிமலை பகுதிக்கு தேவையான அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் பெரும்பாலான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பணிகளை விரைந்து முடித்து, பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: