வைகுண்டம் அருகே ஆற்றுமணல் கடத்தியவர் கைது

வைகுண்டம்,ஆக.9: வைகுண்டம் அருகே ஆற்றுமணல் கடத்தியவரை போலீசார் கைது செய்ததுடன், டிராக்டரை பறிமுதல் செய்தனர். வைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், திருட்டுத்தனமாக ஆற்று மணல் எடுத்து வந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குபதிவு செய்து டிராக்டரின் டிரைவர் பேட்மாநகரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் பலவேசம் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 யூனிட் ஆற்று மணல் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: