டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாஜ மனு

தூத்துக்குடி,ஆக.9: ஆத்தூர்-புன்னக்காயல் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலிருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும், ஆத்தூரிலிருந்து குமார பன்னையூர், செல்வன் புதியனூர், புதுநகர் மற்றும் புன்னக்காயல் வரையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அது குறித்து கடந்த ஜூன் 27ம் தேதி ஆத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அன்று நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடனே டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று திருச்செந்தூர் தாசில்தார் வாக்குறுதி அளித்தார். ஜே.சி.பியை வைத்து ரோட்டை பெயர்த்து போட்டிருக்கிறார்கள். ஆனால் சாலை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும், அதுபோல் குறிப்பிட்ட அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: