அதிமுக, பாஜவினர் திமுகவில் இணைந்தனர்

பாவூர்சத்திரம், ஆக. 9: கல்லூரணியைச் சேர்ந்த அதிமுக, பாஜவினர்  தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கீழப்பாவூர் ஒன்றியம், கல்லூரணியைச் சேர்ந்த அதிமுக, பாஜ நிர்வாகிகளான பரமசிவன், தர்மர், முருகன், செல்வகண்ணன், ரமேஷ், முத்துகுமார், கருடராஜா, கண்ணன், கருப்பசாமி, பாரதிராஜா, அமிர்தலிங்கம், சுடலைமணி, சுரேஷ், முருகன் உள்ளிட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  அப்போது கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் சீனித்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைச்செயலாளர் சிவஅருணன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தளபதி விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: