மூைலக்கரைப்பட்டியில் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி

நெல்லை, ஆக. 9: தமிழக காங்கிரஸ் பொருளாளரான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, நடுவக்குறிச்சி பஞ்சாயத்து, மூலைக்கரைப்பட்டி  பேரூராட்சி பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மூலைக்கரைப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்திலும்,  டோனாவூர்  சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார். அப்போது உருக்குலைந்து காணப்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசியபோது உத்தரவிட்டார்.  

    

நிகழ்ச்சிகளில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்  அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி காங்கிரஸ்  தலைவர் முத்துக்கிருஷ்ணன், நாங்குநேரி மேற்கு, கிழக்கு வட்டாரத் தலைவர்கள்  வாகைதுரை, ரவீந்திரன், மூத்த தலைவர்கள் மாசிலாமணி, ஊசிக்காட்டான், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர்   பார்வதி, முனைஞ்சிப்பட்டி கிராம தலைவர்  மாரிமுத்து,   மூலைக்கரைப்பட்டி வார்டு கவுன்சிலர்  மரியசாந்தி, வார்டு தலைவர்கள்   மரியபிலியன்ஸ்,  சுடலைத்துரை, நிக்சன், சுந்தர், ஜெயசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: