மின் மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி ஊட்டியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி,ஆக.9:  மின்சார மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி ஊட்டியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு பாராளுமன்றத்தின் மின் மசோதவை தாக்கல் செய்ய நடவடிக்ைக எடுத்து வருகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா மின் பகிர்மான வட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பில் மின்சார மசோதவை திரும்ப பெற வேண்டும், மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள உதவி செயற் பொறியாளர் அலுலவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். ஐக்கிய சங்கத்தின் செயலாளர் பாபு, பொறியாளர் சங்க செயலாளர் சந்தீப், ராதா, சுரேஷ் உடப்ட மின் ஊழியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: