அம்ச விநாயகர் கோயிலில் பொங்கல் விழா நாளை நடக்கிறது

திருப்பூர், ஆக.9: திருப்பூர் அனுப்பர்பாளையம், திலகர்நகர்  அம்ச விநாயகர்,  சாந்த கருப்பராய சுவாமி, கன்னிமார் திருக்கோயிலில் 12ம் ஆண்டு பொங்கல் விழா நாளை நடக்கிறது. இதையொட்டி கடந்த 7ம் தேதி மாலை 5 மணிக்கு  சக்தி விநாயகர், ஸ் கற்பக விநாயகர்,  செல்வ விநாயகர்,  கன்னிமார் சுவாமி சாட்டுதல் பொரி மாற்றுதலும், இரவு 10.30 மணிக்கு பொட்டுசுவாமிக்கு பொங்கலும் வைக்கப்பட்டது.

8ம் தேதி காலை 7 மணிக்கு சக்தி விநாயகர், கற்பக விநாயகர், ஸ்செல்வ விநாயகர், அம்ச விநாயகருக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு சலங்கை ஆட்டம், வாணவேடிக்கையுடன் மாளவிக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 5 மணிக்கு சலங்கை ஆட்டம், வாணவேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. நாளை (10ம் தேதி) காலை  சாந்தகருப்பாரய சுவாமி பொங்கல், மதியம் மணிக்கு உச்சி பூஜை, மகா தீபாராதனையும், 11ம் தேதி காலை மஞ்சள் நீர் அபிஷேகம், மறுபூஜை சிறப்பு அலங்காரம், தீப ஆராதனை நடக்கிறது.

Related Stories: