7 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும்: மேற்குபதியில் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது

திருப்பூர், ஆக. 9: திருப்பூர்  மாவட்ட கலெக்டர் வினீத்திடம், மேற்குபதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த குடிபிரியர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள்  கூறியிருப்பதாவது: கிராமப்பகுதியான எங்கள் மேற்குபதியில் அரசு  டாஸ்மாக் கடை கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த டாஸ்மாக் கடை  அருகில் பள்ளி மற்றும் கல்லூரிகள், எந்த வழிபாட்டு தலங்களோ இல்லை. ஆனால்  சில நபர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த கடையை  மூடுகிறார்கள். இந்த கடையின் மூலம் யாருக்கும் எந்த ஒரு அச்சுறுத்தலோ,  தொல்லையோ இல்லை. இந்த கடையை மூடுவதால் எங்கள் பகுதியில் இருந்து 7 கிலோ  மீட்டர் தொலைவிற்கு சென்று மதுபானம் வாங்கும் நிலை ஏற்படும். இதனால்  விபத்து மற்றும் போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே  மேற்குபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கூடாது. தொடர்ந்து செயல்பட  அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories: