போதை மாத்திரை, கஞ்சா சாக்லெட் கும்பலை பிடிக்க வெளிமாநிலங்களில் கோவை போலீசார் முகாம் விரைவில் பிடிபடுவார்கள்- கமிஷனர் பேட்டி

கோவை, ஆக.9: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘கோவை மாநகரில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 45 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.  விசாரணையில் கஞ்சா சாக்லெட் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும், போதை மாத்திரைகள் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இதனை விற்பனை செய்த வியாபாரிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 3 தனிப்படையினரும் ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களுக்கு சென்று உள்ளனர். கஞ்சா சாக்லெட், போதை மாத்திரை கும்பல் விரைவில் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: