அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட், புத்தகங்கள்

ஈரோடு, ஆக. 9: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி, திமுக ஈரோடு தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஈரோடு நாராயணவலசு மாணிக்கப்பாளையம் அண்ணா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 99 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், நீட் தேர்வு மாணவர்களுக்கு உயர் கல்வி பெற உதவித்தொகையையும் வழங்கினார்.

தொடர்ந்து, பள்ளியில் விளையாட்டு திடல், போர்வேல், கழிப்பறை வசதி ஏற்படுத்தி துவக்கி வைத்தார். மாணவரணி சார்பில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதையும் அமைச்சர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, சின்னையன், திண்டல் குமாரசாமி, மணிராசு, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் காட்சு சுப்பு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், செங்கோட்டையன், மாணவரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன், ரவி, மாநகர அமைப்பாளர் தனசேகரன், நிர்வாகிகள் வினோத், மணி என்ற சிவா, ஹரி விக்னேஷ், கார்த்திக், கவுரி சங்கர், ரமேஷ், மவுலீஸ்வரன், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் செய்திருந்தார்.

Related Stories: