ரூ.6.49 கோடியில் கட்டப்பட்ட போலீசார் குடியிருப்பு, 2 போலீஸ் ஸ்டேஷன்கள்

ஈரோடு, ஆக. 9: ஈரோடு மாவட்டத்தில் ரூ.6.49 கோடி மதிப்பீட்டில் கட்டிய போலீசார் குடியிருப்பு, 2 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டேட் பேங்க் ரோட்டில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. இதேபோல், சத்தியமங்கலத்தில் ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனும், பெருந்துறையில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பில் 32 போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பும் புதிதாக கட்டப்பட்டிருந்தது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதில், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நிகழ்ச்சியில், ஈரோடு எஸ்பி சசி மோகன், டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: