கடவூர் தாலுகாவில் நாளை துவக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

கரூர், ஆக. 9: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கடவூர் தாலுகாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபர்கள் பயன்பெறும் வகையில் நாளை (10ம்தேதி) இடையப்பட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 11ம்தேதி கொசூர் கிராமம், சமூதாய கூடத்திலும், 12ம்தேதி பாலவிடுதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், 13ம்தேதி வரவணை கிராமம், சமுதாய கூடத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளி நபர்கள் தங்களது இருப்பிடதிற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளி நபர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு, உதவி உபகரணங்கள், கடனுதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம் மற்றுமு பிற உதவிக்ள பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: