கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு

கரூர், ஆக. 9: கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. கலந்தாய்வின் முதல் நாளான நேற்று சிறப்பு சேர்க்கை, என்சிசி, முன்னாள் படைவீரர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வினை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி கலந்து கொண்டு முதல் சேர்க்கைக்கான உ த்தரவை வழங்கி துவக்கி வைத்தார்.நேற்று நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 114 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.

இதில் 814 விண்ணப்பங்கள் வந்திருந்தன. 47 பேருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து,10ம் தேதி பிஏ தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 18ம்தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது. முதல் நாள் நடைபெற்ற இந்த சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வில் ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: