×

தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்

தொட்டியம், ஆக.8: தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு மூலஸ்தானத்தில் அமைந்துள்ள மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொட்டியம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags : Madurai Kalliyamman ,
× RELATED திருவிடைமருதூர் அருகே கபடி வீரர் மாரடைப்பால் பலி