திருச்சி மாநகரில் 2800 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

திருச்சி, ஆக.8: திருச்சி ரங்கம் மேலவாசல், தெப்பக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அம்மா மண்டபம் சாலையை சோ்ந்த சுதாகா்(36) என்பவரை ரங்கம் போலீசார் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 1500 கிராம் கஞ்சா, ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனா்.

அதேபோல் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள சாரநாதன் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராம்ஜி நகா் மில் காலனி பகுதியை சோ்ந்த ஆனந்த்(30) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 1300கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆனந்த் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories: