பெண்ணிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

திருச்சி, ஆக.8: திருச்சி பாலக்கரை பீமநகர் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகள் மஞ்சுளா (27). இவர், பீமநகர், மார்சிங் பேட்டை பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்குவந்த இளைஞர்கள் 3 பேர், அவரை மிரட்டி அவரது கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பாலக்கரை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுராம் (19), வரகனேரி நாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாத் (21), மண்ணச்சநல்லூர் மேல தேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மசீலன் (23) ஆகிய மூவரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: