கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதி மேல்நிலை ெதாட்டி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

கரூர், ஆக. 8: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால், தொட்டி வளாகத்தை சுற்றிலும் போதிய பாதுகாப்பின்றி திறந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து செல்லவும் வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

எனவே, இந்த மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, அனைவரின் நலன் கருதி தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: