முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு கரூரில் மாவட்ட திமுக சார்பில் மவுன ஊர்வலம்

கரூர், ஆக.8:முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின் கீழ் மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் மாவட்ட திமுக சார்பில் கரூர் ரவுண்டானா அருகில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் பஸ் நிலையம் ரவுண்டானாவில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை நிர்வாகிகள் திமுக மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் மவுன ஊர்வலம் சென்றனர். நிகழ்ச்சியில் நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, கரூர் மேயர் கவிதா கணேசன், மாநில சட்டப் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மணிராஜ், எம்எல்ஏக்கள் குளித்தலை மாணிக்கம் ,அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், சாரதி சுப்பிரமண்யம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் எஸ்பி கனகராஜ், அன்பரசன், ஆர்எஸ் ராஜா, வெங்கமேடு சக்திவேல், கரூர் மாநகர பொறுப்பாளர்கள் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கேவி ஆர் வெங்கடேஷ் ,மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்எஸ் கருணாநிதி, மகேஸ்வரி , பூவை ரமேஷ் பாபு ,ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் ஆர் கந்தசாமி, எம் ரகுநாதன், வளர்மதி சிதம்பரம், கார்த்தி, மணிகண்டன், புகளூர் நகராட்சித் தலைவர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் விகேடிராஜ் கண்ணு, சாலை சுப்ரமணியன், காலனி செந்தில் மாமன்ற உறுப்பினர்கள் சாலை ரமேஷ் ,பால வித்யா அருள்முருகன் வளர்மதி சம்பத்குமார் ,யசோதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கே என் பெரியசாமி, செல்லை சிவா, ஜெகதாபி ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: