×

1,459 மையங்களில் தடுப்பூசி முகாம்

மதுரை, ஆக.8: மதுரை மாவட்டத்தில், 33வது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில், ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த, மதுரை மாவட்டத்தில், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும், 2வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் வகையில் நேற்று 33வது தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் மொத்தம் 3,10,490 பேர். இதில் ஊரக பகுதிகளில், 1,19,981 பேரும், மாநகர பகுதிகளில் 1,90,509 உள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 11,57,097 பேர் உள்ளனர். ஊரக பகுதிகளில் 5,76,518 பேரும். மாநகர பகுதிகளில் 5,80,579 பேர் உள்ளனர். இவர்களுக்காக மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 909 மையங்களும், நகர்ப்பகுதிகளில் 550 மையங்களும் என மொத்தம் 1,459 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் நடந்தது. இதில்,
ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது