பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி

உடுமலை, ஆக. 8: உடுமலை  அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி,  திருமூர்த்தி அணை, வண்ண மீன்காட்சியகம், நீச்சல் குளம் உள்ளிட்டவை உள்ளன.  

தென்மேற்கு  பருவமழை தீவிரம் அடைந்ததால், இதனால் அருவியில்  குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று பஞ்சலிங்க அருவியில்  வெள்ள அபாயம் நீங்க, மிதமான அளவில் தண்ணீர் கொட்டியது.

இதையடுத்து,  சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: