முருங்கை கிலோ ரூ.17 விற்பனை

வெள்ளகோவில், ஆக.8: வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்தில், ஒரு கிலோ 17  ரூபாய்க்கு விற்பனையானதுவெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த வாரம் 30 டன் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையானது, நேற்று 30 டன் விற்பனைக்கு வந்தது. மர முருங்கை கிலோ ரூ.10-க்கும், செடி முருங்கை கிலோ ரூ.14-க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.17-க்கும் வர்த்தகம் நடந்தது. உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: