செரங்காட்டில் கலைஞர் கருணாநிதி நினைவு நாள்

திருப்பூர், ஆக. 8: கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் விழா நேற்று செரங்காட்டில் உள்ள மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வீடு முன்பு நடந்தது.  கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மேயர் தினேஷ்குமார் தலைமையில் திமுக நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 49-வது வட்ட செயலாளர் மனோகரன், திருப்பூர் தெற்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியம், வள்ளியம்மை நகர் நாகராஜ். என்.பி.நகர் நாகராஜ், முருகேசன், பிரகாஷ், ராஜேஷ், தங்கராஜன், அமிர்தலிங்கம், சுந்தர், பாலு, ஜெகதீஷ், இளங்கோ, செல்வராஜ், பரந்தாமன், பாண்டியன், அமுதம், ரகுமான், வஹாப் பாய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: