பஸ் ஸ்டாண்டில் போதிய இருக்கை இல்லாமல் பயணிகள் தவிப்பு

பொள்ளாச்சி,ஆக.8: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் போதிய இருக்கை இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் திறந்த வெளியிலேயே நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகளில் நகராட்சி சார்பில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான கடைக்காரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தோடு அருகில் பயணிகள் பயன்பாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்துள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள இருக்கைகள் பல சேதம் காரணமாக, அதனை பயணிகள் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.

இருப்பினும், கூடுதல் இருக்கை வசதி இல்லாமல் பஸ் ஏற வரும் பயணிகள் பலரும் இருக்கையின்றி ஆங்காங்கே நின்று கொள்கின்றனர்.தங்கள் ஊர்களுக்கு வரும் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், இருக்கையின்றி தரையில் அமரும் நிலை ஏற்பட்டுகிறது. மேலும், பெரும்பாலான நேரங்களில் திறந்த வெளியிலேயே பயணிகள் காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்டின் பெரும்பகுதி, ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணிகள் அவதிப்படுவது தொடர் கதையாகியுள்ளது. எனவே, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக, ஆக்கிரமிப்புகளை அகற்றியும், போதிய இருக்கைகளை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: