அட்டப்பாடியில் கனமழை: வீடு இடிந்து முதியவர் பலி

பாலக்காடு,ஆக.8:  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் கனமழை பெய்து வருகிறது.  மழையால் வீடு இடிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். கேரள  மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சோளையூர் மாரநட்டி கொல்லங்காட்டைச்  சேர்ந்தவர் பெருமாள்லச்சி(75). தனியாக வசித்து வந்தார். தொடர்ந்து  இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் வீட்டின்  மேற்கூரை இடிந்து வீட்டினுள் வீழ்ந்தது.இந்த இடுபாடுகளில் சிக்கி பெருமாள்லச்சி  சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இவற்றை  பார்த்த அக்கம்பக்கத்தினர் சோளையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனடியாக விரைந்து வந்த போலீசார் ஊர்மக்கள் உதவியுடன் முதியவரின் சடலத்தை  மீட்டு அகழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி பைத்தனர்.  இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: