தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்ய கூடாது; தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

வால்பாறை,ஆக.8:வால்பாறையில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொழில்வரி பிடிக்க கூடாது என வலியுறுத்தி ஏடிபி தொழிற்சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.  வால்பாறையில் எடிபி தொழிற்சங்க கூட்டம் சங்க தலைவர் வால்பாறை அமீது தலைமையில் நடைபெற்றது. மார்க்கெட் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சலாவுதீன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழில் வரிபிடித்தம் செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வால்பாறை பகுதியில் நிரந்தர கூலி தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு தொழில் வரியாக ரூ.800 வீதம் வருடத்திற்கு 2 முறை தோட்ட நிர்வாகங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து, வால்பாறை நகராட்சிக்கு வரி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளர்களுக்கு தொழில் வரி கிடையாது என்றும், கடந்த பல வருடங்களாக பிடிக்க கூடாது என வலியுறுத்தி வந்த நிலையில், தோட்ட நிர்வாகங்கள் மீண்டும் மீண்டும் பிடித்தம் செய்வதாகவும், கூட்டு குழு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் நிலுவை தொகை கிடைக்க வழிவகை செய்ததற்கு நன்றி தெரிவித்து அனைவரும் இணைந்து ஆள் உயர மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: