வேளாண் பல்கலை.,யில் தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை, ஆக.8: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான பயிற்சி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படுகிறது. இதில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல். பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனை பிரித்து எடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.590 ஆகும். பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில் அடையாள சான்றுகளை சமர்ப்பித்து பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சி முடிவில் சான்றிதழ் அளிக்கப்படும்.

Related Stories: