கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது

ஈரோடு, ஆக.8:  ஈரோட்டில் கஞ்சா விற்பனை பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்கும் வகையில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு தெற்கு காவல் துறையினர், காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்துப் பகுதியில் நேற்று முன் தினம் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்ட போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையை சேர்ந்த சுமதி (40), ஒரிச்சேரிபுதூரை சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: