காலிங்கராயன்பாளையம் பகுதியில் இன்று மின்தடை

ஈரோடு, ஆக.8: ஈரோடு மாவட்டம், தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், இந்த மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் இன்று (8ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தளவாய்பேட்டை, ஜம்பை, பெரியவடமலைப்பாளையம், புன்னம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம், திப்பிச்செட்டிபாளையம், மணக்காடு, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிபாளையம், ஐடியல் நகர், ஆதர்ஷ் நகர், பருவாச்சி, பெரியார் நகர், கரைஎல்லப்பாளையம், எலவமலை, அய்யம்பாளையம், காலிங்கராயன்பாளயம், லட்சுமி நகர், மேட்டு நாசுவம்பாளையம், மணக்காட்டூர், ஆர்.ஜி.வலசு, சின்னபுலியூர், வைரமங்கலம், ராமலிங்க நகர், பழையூர், சென்ன நாயக்கனூர், காமராஜ் நகர், மூலப்பாளையம்.

Related Stories: