ஆசிரியை வங்கி கணக்கில் ₹25 ஆயிரம் அபேஸ்

இடைப்பாடி, ஆக.8: இடைப்பாடி ஆசிரியையின் வங்கி கணக்கில் ₹25ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி தாவாந்தெருவைச் சேர்ந்தவர் லதா(38). இவர் ஈரோடு மாவட்டம் கண்ணாமூச்சி அரசு பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுஇ வீட்டிலிருந்த லதாவின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை உடனே இணைக்குமாறும், அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து எஸ்எம்எஸ் உடன் வந்த லிங்க் மூலம், தனது வங்கி கணக்குடன் பான்கார்டு எண்ணை இணைத்துள்ளார். அடுத்த சில நொடிகளில், அவரது வங்கி கணக்கில் இருந்து ₹25ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதனால் உஷாரான லதா, அடுத்த உடனடியாக அந்த கணக்கில் இருந்த மீதி பணத்தை, தனது உறவினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதனால் மீதமிருந்த தொகை தப்பியது.  பின்னர், இதுகுறித்து இடைப்பாடி போலீசாரின் ஆலோசனையின் பேரில், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் லதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: