வாலிபரிடம் தங்க மோதிரம் பணத்தை பறித்தவர் கைது

சேலம், ஆக.8:சேலம் குகை லைன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (27). இவர் நேற்று முன்தினம் தாதகாப்பட்டி பாட்டன்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வாலிபர், பால்ராஜை வழிமறித்து அரை பவுன் தங்க மோதிரம், ₹1,250 பணத்தை பறித்துச்சென்றார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் பால்ராஜ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சந்திரகலா விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட தாதகாப்பட்டி தாகூர்தெருவை சேர்ந்த தர்மராஜ் (27) என்பவரை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: