கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாள் சேலத்தில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

சேலம், ஆக.8: சேலத்தில் கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளையொட்டி திமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பெரியார் சிலை முன் திமுகவினர் திரண்டனர். அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைதி ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் முடிவில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, கலைஞரின் சாதனை துளிகள் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இதில், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, மேயர் ராமச்சந்திரன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், உமாராணி, தனசேகரன், மத்திய மாவட்ட துணைச்செயலாளர் ரகுபதி, மாநகர செயலாளர் ஜெயக்குமார், துணைச்செயலாளர் வக்கீல் கணேசன், பகுதி செயலாளர்கள் ஏ.எஸ்.சரவணன், மணமேடு மோகன், ஜெகதீஷ், ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், புவனேஸ்வரி முரளி, வக்கீல் சந்திரசேகரன், கவுன்சிலர்கள் வக்கீல் குணசேகரன், மஞ்சுளா கணேசன், கோபால், சீனிவாசன், வக்கீல் மஞ்சுளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சேலம் 4 ரோட்டில் உள்ள எம்பி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைக்கு எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, கலைஞரின் பொன்மொழியை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், அலுவலக முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40 அடி உயர கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவினார். இதில், வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, பனமரத்துப்பட்டி துணைச்செயலாளர் ராஜா, நிர்வாகிகள் வக்கீல் லட்சுமணபெருமாள், நிலவாரப்பட்டி தங்கராஜ், சுப்புரு, நடுவை ரவி, ராஜ்குமார், மதி, கலையரசன், கோபால், மல்லான், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், 23வது வார்டில் செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மாநகரில் பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

Related Stories: