கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி

நாமக்கல், ஆக.8: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல்லில் திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி., தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுதினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில் நாமக்கல்லில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ராமலிங்கம் எம்எல்ஏ, நகர செயலாளர்கள் பூபதி, சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைதி பேரணி நேதாஜி சிலை அருகில் இருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் வழியாக, மோகனூர் சாலையில் அமைந்துள்ள அண்ணாசிலையை சென்றடைந்தது. பின்னர், அங்கு கலைஞரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில் ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், மாநில நிர்வாகிகள் சட்டதிட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நக்கீரன், மணிமாறன், பழனிவேல், முன்னாள் எம்பி சுந்தரம், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், வழக்கறிஞர்கள் மோகன்ராஜ், வடிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், டிடி சரவணன், தேவராஜன், குட்டி (எ) செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காந்தி (எ) பெரியண்ணன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சதீஸ்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கிருபாகரன், கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வேஷ்டிகள், சேலைகள் மற்றும் நலதிட்டஉதவிகளை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.

Related Stories: