கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

தேன்கனிக்கோட்டை, ஆக.8: தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மணிகூண்டு அருகே கருணாநிதி உருவ படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நாகராஜ், வெங்கடசாமி, மோகன், சக்திவேல், சீனிவாசன், சீதர், முத்தாண்டவன், வெங்கடேஷ், கிருஷ்ணன், ராமன், கோபல், உதயசிரியன், சையத்பாஷா, மணிவண்ணன், சார்லஸ்சுமதி, லிங்கோஜிராவ், சென்னீரா, சேகர், இதயத்துல்லா, பார்திபன், திம்மராஜ், மஞ்சு, ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் தளி வடக்கு ஒன்றியம் சார்பில் பெண்ணங்கூர் கிராமத்தில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி தலைமையில் கருணாநிதி உருப படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

நிகழ்சியில் மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா, ஒன்றிய பொருளாளர் முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா, பவுல்ராஜ், நாராயணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தளி பஸ் நிலையத்தில் ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் உருவ படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், திரிவேணி, பொருளாளர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் சிவண்ணா, கங்கப்பா, மாவட்ட பிரதிநிதி கிரேன், சீனிவாசன், சிவசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அஞ்செட்டியில் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சூளகிரி: சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமையில் சூளகிரி ரவுண்டானாவில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷித், பூசன்குமார், அன்பு சேகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உத்தனப்பள்ளியில் வெங்கடேஷ் தலைமையில் பாலசுப்பிரமணி, கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி பாபு, கிளை செயலாளர் வாசு, கவுஸ் பாய், நஞ்சுண்டப்பா, செந்தில், கோவிந்தப்பா, பிடிஏ தலைவர் லட்சுமய்யகவுடு, விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணிவிஜயன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கீதா, அமுதா, கோகுல்ராஜ், நித்தியாமுத்துக்குமார், தமிழ்ச்செல்விசோபன் பாபு, அமுதா, பாரதிராஜா, சிவப்பிரகாசம், மாது, இளங்கோ, சசிவருண், முரளி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: