மளிகை கடையில் ₹1.32 லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஆக.8:  கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்எஸ்ஐ பாஸ்கர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி 5ரோடு ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடையில் சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட ₹1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான தர்மாராம்(26) என்பவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories: