சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

அம்பத்தூர்: திருவள்ளூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மேகலா (36). பட்டரைவாக்கம் ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள  பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து நாகவல்லி அம்மன் கோயில் தெரு வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம  நபர்கள், இவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள், அந்த இருவரையும் மடக்கி பிடித்து அருகில் உள்ள கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள், புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), பிரேம்குமார் (19) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மேகலாவிடம் செல்போன் பறிப்பதற்கு முன், அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே நடந்து சென்று சென்றவரிடம் செல்போன் பறித்ததும், கடந்த 30ம் தேதி அடையாறு திரு.வி.க பாலம் அருகே நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை எம்.கே.பி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மொபட் திருட்டு, அடையாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 இடங்களில் செல்போன் பறிப்பு.

 அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழம்பேடு ரோட்டில் நடத்து சென்ற பாதசாரியிடம் செல்போன் பறிப்பு, சூளைமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்து சென்ற வட மாநில பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி, மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காலையில் சைக்கிளிங் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு என தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.  இவர்களை கைது செய்து, 1 கத்தி, 2 செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: