கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கலெக்டர்  வினீத் கூறுகையில்,``திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா அமராவதி அணை  மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணையின் முழு கொள்ளளவு 90 அடியை எட்ட  உள்ளது. இந்நிலையில், உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து  விடப்பட்டுள்ளது. இதனால், இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட  வாய்ப்பு உள்ளது. அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க  வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ  முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை ஆற்றில் இறங்கி விளையாட  பெற்றோர் அனுமதிக்க கூடாது. இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் அபாய  எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: